|
|
|
உலகின் மிக உயரமான இராட்சத மரம் |
|
|
|
Written by v.s.t.j
|
 பூமியில் இருக்கக்கூடிய தாவரம் அல்லது மரங்களில் மிகவும் பெரியது (உயரத்திலும் பருமனிலும்) எனும் புகழ் சீஹொயா (Sequoia) இனையே சாரும். மேலும் சீஹொயா தாவரத்தின் இனத்தினை ஒத்த ரெட்வூட் (RedWood) எனும் மரவகையும் உலகின் மிக உயரமானதும் மிகவும் பிரமாண்டமானதுமாக காணப்படுகின்றன. இந்த மரங்கள் டைனஸோர் எனும் இராட்சத விலங்குகள் வாழ்ந்த காலத்திலிருந்து (200 மில்லியன் வருடங்கள் முன்பு ) பூமியில் வாழும் தாவரமாக ஆராட்சி மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் முதல் தாவரவியல் ஆராட்சியாளர் என பலர் மத்தியில் மிகவும் பெருத்த வினாக்களையும் ஆச்சரியங்களையும் உருவாக்கிவரும் ஹொயாவின் பிரபலமான தரவுகள் பின்வருமாறு உள்ளது.
- சீஹொயா (Sequoia) மரங்கள் 180 மில்லியன் வருடகாலமாக பூமியில் காணப்படுகின்றன.
- இந்த மரம் (தாவரம்) 310 அடி உயரம் வரை அதிகபட்சம் வளர்கின்றன.
- சீஹொயா மரத்தின் அடிப்பகுதி (குற்றி) விட்டம் 45 அடிவரை காணப்படுகின்றது. இதனால் (தற்காலத்திலும்) இம் மரத்தினை மனிதர்கள் குடைந்து போக்குவரத்து பாதைகளை (குகை) உருவாக்கியுள்ளனர். அத்துடன் முற்காலத்தில் இம்மரத்தின் உட்பகுதியில் மனிதன் குடியிருந்ததாகவும் சொல்லப் படுகின்றது.
- இம்மரம் விதை மூலமாக தனது பரம்பலை (தாவர இனவிருத்தி ) செய்கின்றது. இந்த இராட்சத மரத்தின் இலைகளும் விதைகளும் கால் (1/4) அங்குலத்திலும் மிக சிறியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆராட்சி மூலமாக சாதாரணமாக சீஹொயா மரத்தின் வயது 3,200 வருடங்களாக உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
- ஒர் முதிர்ச்சியான ஹொயாவின் வேர்கள் 1 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகின்றது.
- முற்றிய சீஹொயா மரத்தின் வெளி பட்டை மட்டும் 2 அடியிலும் மேலான தடிப்புடையது.
- இந்த மரங்கள் தற்போது வடக்கு அமெரிக்காவில் பெருமளவில் காணப்படுகின்றன. இந்த மரங்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் 135 மில்லியன் வருடம் முன்பு பெருமளவில் காணப்பட்ட போதிலும் இன்று வடக்கு அமெரிக்காவில் மட்டுமே பெருமளவில் உயிர் வாழ்கின்றன.
- மிகவும் பழைமையாகவுள்ள இந்த மரத்தினை உள்ள பூங்காக்கள் உலகில் பிரபலமாக மாறும் அளவிற்கு இதன் முக்கியத்துவம் பெருமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
[இந்த இராட்சத மரத்தின் பின்னால் பிரமாண்டமான பல தகவல்கள் உள்ள போதிலும் சுருக்கமான தகவல் மட்டும் இப்பகுதியில் தரப்பட்டுள்ளது.]
தலவல் தொடர்பிலான வீடியோ பதிவு. தேடுதளங்களில் பெறப்பட்ட படங்கள்.( search from sequoia)
|
|
Last Updated on Monday, 31 May 2010 16:03 |
|
உலகில் மிகச்சிறிய மலர் பூக்கும் தாவரம். |
|
|
|
Written by v.s.t.j
|
|
உலகில் பூக்கும் தாவர வகைள் 250,000 இருப்பதாக கணிப்பிடப் படுகின்றது. இவற்றின் உயரங்கள் 0.6 மில்லி மீற்றரில் (mm) இருந்து 300 அடி வரையும் இருக்கின்றன.

உலகில் இருக்கக்கூடிய மிகச்சிறிய தாவர உயரத்தில் வொல்பிய (wolffia) எனும் தாவரம் அடங்குகின்றது. இந்த வொல்பிய (wolffia) தாவரம் பூமியின் வெப்ப வலைய பிரதேசத்திலுள்ள தேங்கிய (அமைதியான) நீர்நிலைகளிலும் , குளங்களிலும் உயிவாழ்கின்றன. இந்த தாவரம் (wolffia) வேர்கள் , இலைகள் அல்லது தண்டு எதனையும் கொண்டிருப்பதிலை. இத் தாவரம் பூத்து (மலர்ந்து) , காய்த்து , கனியாகின்ற போதிலும் பதியமுறையில் மட்டுமே இனவிருத்தி செய்கின்றது. மேலும் இந்த தாவரத்தின் பூ மட்டுமல்ல பழமும் உலகில் மிகச்சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
வொல்பிய (wolffia) பற்றிய சில சுவையான தகவல்கள்.
இந்த தாவரத்தின் ஒரு டசின் (12) பூக்களை ஒரு ஊசியின் துளையில் அடக்க முடியுமாம் (படத்தில் 2 வொல்பிய மலர்கள் ஊசியின் துளையில்).
- வொல்பிய தாவரத்தின் உயரம் அவுஸ்ரெலிய நாட்டிலுள்ள உலகின் மிக உயரமான (300 அடி) யூக்கலிப்ரஸ் (Eucalyptus) மரத்தினை விடவும் 165,000 மடங்குகள் சிறியதாம்.
- ஒரு இளம் தாவரம் (wolffia) 30 மணி நேரத்தில் புதிய தாவரத்தினை உருவாக்கும் வல்லமை உள்ளது காரணமாக 4 மாதங்களில் 1 நொனிலியன் (1 இற்கு பின்னால் 30 பூச்சியங்கள் கொண்ட இலக்கம்) தாவரத்தினை உருவாக்கும் வல்லமை உடையது எனவும் கூறப்படுகின்றது.
மேலதிக தகவல் பெற (waynesword). |
|
Last Updated on Thursday, 31 December 2009 09:06 |
|
|
|
|
|
|
Page 1 of 3 |