|
உங்களுக்குத் தெரியுமா? |
|
|
|
Written by v.s.t.j
|
- அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.
- ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.
- இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ்.
- புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் அமேலியா ஏர்ஃகாட் காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.
- இந்தியக் கடலோரக் காவல்படை 1978ல் உருவாக்கப்பட்டது.
- முன்னாள் இசுரேலியப் பிரதமர் கோல்டா மேயர் அந்நாட்டு அரசியலின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார்.
- மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ டபிள்யூ. டி. அமரதேவ.
- தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை சிறப்பு வான்சேவை என்று அழைக்கப்படுகிறது.
- கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் பனிக்குட நீர்.
- சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி.
- கடம்பினி கங்கூலி பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில்மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார். பயிற்சிபெற்ற முதல் பெண்
- கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.
- கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது.
- சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு கன்பூசியசு அமைதிப் பரிசு என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.
- தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.
- சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.
- சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.
- இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது.
- வெள்ளை ரோசா என்பது நாசி செருமனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் செருமனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
- எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
- மகடூஉ முன்னிலை என்பது, எதிரில் உள்ள பெண்ணொருத்திக்குச் சொல்வதுபோல் பாடல்களை எழுதும் ஒரு முறையைக் குறிக்கும்.
- இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது.
- திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது.
- ஆலோவீன் பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் .
- கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
- இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.
- கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது.
- இந்தியாவில் முதல் தொடருந்துப் போக்குவரத்து 22 டிசம்பர் 1851-ல் ரூர்க்கிக்கு கட்டுமானப்பொருட்களைக் கொண்டு செல்ல துவங்கப்பட்டது.
|
.....

அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற

இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
 பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)

உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில்.
(புதிய தொழில்நுட்ப

ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
 உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
 ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
 பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற

13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
 உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
 இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு

உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)
நீங்கள் சீனாவில்

2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60

மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
 இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்

காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு.
ஒரு குழந்தை

ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ

கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
 பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்

நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
 ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்

சோவியத் ஒன்றியம் 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்

இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
|
|
|