'போதை மருந்தைவிட மது மோசம்' PDF E-mail
Written by v.s.t.j   
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற த லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது.

போதை மருந்துகளால் தனி நபர்களுக்கு மாத்திரமல்லாமல், பரந்துபட்ட சமூகத்துக்கே ஏற்றபடக் கூடிய ஆபத்துக்களை அளவிடுவதற்கான புதிய மதிப்பீட்டு முறை ஒன்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மதுபான பாவனை பாதக விளைவுகள் குறித்து இங்கு பிரிட்டிஷ் சமூகத்தில் பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கை இந்த விவகாரத்தை மேலும் ஒரு படி முன்னே கொண்டு செல்கிறது.

கொக்கெயின் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை விட மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

சுகாதார ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும் 16 வகையிலான பாதகத்தை ஏற்படுத்தும் 20 போதைப் பொருட்களை பட்டியலிட்டபோது, அதில் மது 72 புள்ளிகளையும், ஹெரோயின் 55 புள்ளிகளையும், முகரும் கொக்கெயின் 54 புள்ளிகளையும் பெற்றன.

ஒரு தனி நபரின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் வது மது நான்காவது மோசமான மூலமாக இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையின் முடிவு, மதுபானம் தான் பரந்துபட்ட சமூக மட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை பிரதிபலிக்கின்றது.

இந்தத அறிக்கையை தயாரித்துள்ள முக்கியமானவர்களில் ஒருவர் பிரிட்டிஷ்
அரசாங்கத்தின் போதைப்பொருள் குறித்த முன்னாள் ஆலோசகரான பேராசிரியர் டேவிட் நட். போதைப்பொருள் குறித்த கொள்கைகள் பற்றிய வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்ததற்காக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பிரிட்டனில் போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் காலாவதியானவை என்று அவர் கூறுகிறார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்களை அரச கொள்கையாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுபவர்கள் இந்த ஆய்வு ஒரு போலி விஞ்ஞானம் என்று விபரிக்கிறார்கள். அந்த போதைப் பொருட்களின் பட்டியலில் இருப்பவற்றில் மது மாத்திரமே சட்டபூர்வமான போதை மருந்து என்பதால், அது சமூகத்தில் பரந்துபட்ட அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற முடிவில் எந்தவிதமான ஆச்சரியமும் கிடையாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

லண்டனில் உள்ள மதுபானக் கடைகளில் மது அருந்துபவர்கள் கூட இந்த ஆய்வின் முடிவு குறித்து திருப்தி அடையவில்லை.

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து மேலும் விவாதங்கள் தொடர்வதற்கு தற்போதைய விவாதம் மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனை விட அரைவாசியளவுக்கே மது அருந்தப்படுகின்ற ஸ்வீடன் போன்ற நாடுகளிடம் இருந்து பிரிட்டன் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறன.

அரசாங்கம் இந்த விடயத்தில் புதுமையான அணுகுமுறையை கைக்கொண்டால் தான் அது முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

-நன்றி BBC தமிழோசை-

Last Updated on Friday, 12 November 2010 08:26
 


...

Powered By relatedArticle

.....
உங்களுக்குத் தெரியுமா?
18 January 2012, 08.46 v.s.t.j பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற
இங்கிலாந்து நாட்டின் வருடாந்த வான வேடிக்கை தினம்.(நவம்பர்  5 ம் திகதி)
    இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
பிலிக்கர் ,பேஸ்புக் தளங்களின்  போட்டோ போட்டி.
பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)
Economist "Did you know?"
15 November 2009, 11.01 v.s.t.j பலதும்
Economist
உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில். (புதிய தொழில்நுட்ப
ரஷ்யாவின் முதலாவது புல்லட் ரைன்.
ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
உங்களுக்கு தெரியுமா ? பதிப்பு-2009
உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்
உங்களுக்கு தெரியுமா ?
24 September 2010, 16.47 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
Did You Know...?
15 November 2009, 11.11 v.s.t.j பலதும்
Did You Know...?
செக்ஸில் திருப்தி என்றால் என்ன?
ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
காமம் - இஸ்லாத்தின் பார்வையில்
பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற
உங்களுக்குத் தெரியுமா?
20 July 2011, 09.48 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
ஒரு பிலியன் காலம் முன்னர்
13 June 2009, 09.27 v.s.t.j பலதும்
ஒரு பிலியன் காலம் முன்னர்
உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
இறாத்தல் குறியீடு lb எப்படி வந்தது ?
இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு
உங்களுக்கு தெரியுமா?
10 June 2009, 13.41 v.s.t.j பலதும்
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்) நீங்கள் சீனாவில்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.24 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60
உங்களுக்கு தெரியுமா ?
11 April 2011, 11.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு
இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு. ஒரு குழந்தை
உங்களுக்கு தெரியுமா ?
25 October 2010, 19.27 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ
உங்களுக்குத் தெரியுமா
23 June 2010, 06.42 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா
கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்
உங்களுக்கு தெரியுமா ?
10 September 2010, 12.04 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
'போதை மருந்தைவிட மது மோசம்'
12 November 2010, 08.17 v.s.t.j பலதும்
'போதை மருந்தைவிட மது மோசம்'
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.40 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
சோவியத் ஒன்றியம்  1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்
உங்களுக்கு தெரியுமா ?
02 October 2010, 07.23 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.