|
உங்களுக்கு தெரியுமா ? |
|
|
|
Written by wiki
|
- ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 அக்டோபர் 5 இல் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர் கிருஷ்ணா வைகுந்தவாசன் .
- புவிநிலைச் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் செயற்கைக் கோள் புவிவானில் ஒரே இடத்தில் இருந்து புவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தை எந்நேரமும் படமிட முடியும்.
- நாம் காணும் எல்லாப் பொருட்களின் பிம்பமும் நமது விழித்திரையில் தலை கீழாகத் தான் விழும். மூளை தான் இவற்றை நேராக மாற்றுகிறது.
- புற்று நோய்க்கு கண்கண்ட மருந்தான மீத்தோடிரெக்சேட்டைக் கண்டறிந்தவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த எல்லப்பிரகத சுப்பாராவ் ஆவார்.
- சிவகீதை என்பது இராமனுக்கு சிவபெருமான் உபதேசித்தருளியதாய்க் கூறப்படும் பாடல்களைக் கொண்டுள்ள நூலாகும்.
- எகிப்தின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே காயல்பட்டினம் நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. பெண்கள் நடந்து செல்வதற்கென்றே தனியாக வீதிகளும் உள்ளன.
- இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் இயற்றப்பட்ட பாடல் தான் வங்காளதேசத்தின் நாட்டுப்பண்ணாக உள்ளது.
- 1750 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மர் தனது அரசு முழுவதையும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குத் தானமாக எழுதி வைத்து விட்டார்.
- விமானத்திலிருந்து பார்க்கும் பயணிக்கு வானவில் வட்ட வடிவமாகத் தெரியும்.
- பகலொளி சேமிப்பு நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும்.
- காற்றிசைக் கருவியான நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது.
- தும்பிக்கை காயம்பட்டாலோ, துண்டிக்கப்பட்டாலோ யானையால் உயிர்வாழ இயலாது.
- உலகிலேயே மிகவும் மெல்லிய பொருளான கிராபீன், உலகிலேயே மிகவும் உறுதியான பொருளும் கூட! எஃகை விட இது 100 மடங்கு உறுதியானது.
- கணிதத்தில், ஒரு பல்கோண எண் என்பது, ஒழுங்கான பல்கோண வடிவில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு எண்ணாகும்.
- 1918 இல் அமெரிக்கா வெளியிட்ட தலைகீழ் ஜென்னி என்ற அஞ்சல்தலையில் உள்ள விமானம், தவறுதலாக தலைகீழாக அச்சிடப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு 1 மில். அமெரிக்க டாலர்களாகும்.
- பிரமிட்டுகளின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
- 1811 இல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தினால் மிசிசிப்பி ஆறு சிறிது நேரம் பின்னோக்கிப் பாய்ந்தது.
- மனித வடிவிலான ரோபோ இயந்திரத்துக்கான அடிப்படைத் தொழில்நுட்பங்களை 1495ஆம் ஆண்டு லியொனார்டோ டா வின்சி வரைந்து வைத்திருந்தார்.
- தோகோ என்பது லியான்கார்டு செப்பாலா என்பவரின் பனிவண்டியை இழுத்துச் சென்ற நாய் அணியை முன்நடத்திச் சென்ற நாய். இந்த அணியின் மிக நீண்ட பயணம் 1925 இல் அலாசுக்காவில் டிப்தீரியா என்னும் தொற்று நோய் பரவாமல் தடுக்க நோய்க்கு எதிர் மருந்தைக் கொண்டு செல்வதற்காக அமைந்தது.
|
.....

அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற

இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
 பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)

உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில்.
(புதிய தொழில்நுட்ப

ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
 உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்

ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
 ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
 பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற

13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
 உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
 இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு

உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்)
நீங்கள் சீனாவில்

2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60

மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
 இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்

காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு.
ஒரு குழந்தை

ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ

கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
 பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்

நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
 ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்

சோவியத் ஒன்றியம் 1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்

இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
|
|
|