இங்கிலாந்து நாட்டின் வருடாந்த வான வேடிக்கை தினம்.(நவம்பர் 5 ம் திகதி) PDF E-mail
Written by v.s.t.j   

 

 

இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி அனுஸ்டிக்கப்படும் வானவேடிக்கையின் பின்னால் மிகப்பெரும் புரட்சி வரலாறு உள்ளது. இந்த வானவேடிக்கை தினமானது பொன்பஃயர் (Bonfire) இரவு அல்லது ஹைய் பவ்கெஸ் (Guy Fawke's) இரவு எனவும் அழைக்கப்படும். அதாவது ஒரு வெடி குண்டு தீவிரவாதியின் பெயரால் இந்த இரவுகள் அழைக்கப்படுகின்றன எனினும் வான வேடிக்கை இரவு தீவிரவாதிகளின் தோல்வியினை கொண்டாடும் நிகழ்வாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரவு இங்கிலாந்து நாட்டில் மிகவும் முக்கிய இரவாக கடந்த 500 வருடங்களாக இருந்து வருகின்றது. இத்தனை முகியத்துவம் வாய்ந்த இரவு பின்னால் இருக்கும் வரலாற்று சம்பவம் பின்வருமாறு சுருக்கமாக தரப்படுகின்றது.

வரலாற்று சம்பவம் மதரீதியானது என்பதனால் முக்கிய இரு கிறிஸ்தவ மத பிரிவுகளை புரிவது அவசியமாகவும் உள்ளதனால் அவற்றின் வேறுபாட்டினை முதலில் அறிக.

  • கத்தோலிக்கர் (catholic) :- இந்த மத பிரிவினர் தமது மதத்தின் தலைமையானது ரோமில் உள்ள புனித பாப் (Pope) அவர்களே என நம்புவர்களாவர்.
  • புரட்டஸ்தாந்து (Protestant) :- இம் மதத்தினர் இங்கிலாந்து நாட்டில் ஆட்சி புரியும் மன்னர் அல்லது அரசி தான் தமது மதத்தின் தலைமை என நம்பும் மதக் கொள்கை உள்ளவர்களாகவும் உள்ளனர்.


இங்கிலாந்து நாட்டில்15ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பாண்மையான மக்கள் கத்தோலிக்கர்களாக இருந்தார்கள். இந்த பெரும்பாண்மை கத்தோலிக்கர்களை ஆட்சி செய்யவென 1532 ம் வருடம் பதவிக்குவந்த 8 வது ஹென்றி மன்னன் (King Henry viii) தாமே கிறிஸ்தவ மதத்தின் தலைவர் எனவும் அறிவித்தார். இந்த மத தலைமை கட்டளையை கடைப்பிடிக்க மறுத்த பலரும் படுகொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்கர்களின் தேவாலயம் யாவும் விற்க்கப்பட்டன அல்லது மூடப்பட்டன. அத்துடன் 1547 ம் வருடம் பதவிக்கு வந்த 8 வது ஹென்றியின் மகன் 6 வது எட்வர்ட் (Edward vi) தொடர்ந்தும் புரட்டஸ் தாந்து மதத்தினை கட்டாயமாக்கினார், கடுமையாக்கினார்.

ஆனால் 1553 ம் வருடம் ஆட்சிக்கு வந்த அரசி மேரி 1 (Queen marry I) புரட்டஸ் தாந்து மதத்தினரை தண்டித்ததுடன் கத்தோலிக்க மதத்தினை கடைப்பிடிக்க கட்டளையிட்டார். இவர் ஆட்சியில் கட்டளைக்கு இணங்கமறுத்த 300 க்கு மேற்பட்ட புரட்டஸ்தாந்தினர் உயிருடன் கட்டிவைக்கப்பட்டு எரியூட்டப்பட்டனர்.


அரசி மேரியின் ஆட்சியினைத் தொடர்ந்து 1558 ம் வருடம் 1ம் எலிசபத் (Elizabeth I) ஆட்சிக்கு வந்ததும் புரட்டஸ்தாந்து மதத்தினை அறிவித்தார். இவர் ஆட்சிக்காலத்தில் கடுமையான சட்டங்களையும் மத விடையமாக அறிவித்தார். இந்த மதச்சட்டத்தில் ஞாயிறு தினத்தில் யாவரும் புரட்டஸ்தாந்து தேவாலயம் செல்வது கட்டாயமாக்கப் பட்டதுடன் சட்டத்தினை மீறி கத்தோலிக்க மத கோட்பாட்டில் உள்ளவர்கள் மரண தண்டனைக்கும் உள்ளாக்கியது. இந்த மத பந்தாட்ட காலகட்டத்தில் 1570ம் வருடத்தில் ஒரு தீவிரவாதியாகப்போகும் ஹைய் பவ்கெச (Guy Fawkes) எனும் குழந்தை அவதரித்தது.

ஹைய் பவ்கெச் குடும்பம் இரகசியமாக தமது மத நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் ஹைய் பவ்கெச் கல்விகற்ற இடத்தில் மூன்று கத்தோலிக்க மாணவர்கள் இவருடன் மிகவும் இரகசியமாக அன்பான, நெருக்கமான நட்பினை பேணிவந்தனர். காலப்போக்கில் ஹைய் பவ்கெசவின் நண்பர்கள் மூவரும் கத்தோலிக்க போதகர்களாக வரவும் அவர்கள் அனைவரும் சட்டத்தி பிரகாரம் மரண தண்டனைக்கும் உள்ளாக்கப் பட்டனர். இந்த சம்பவத்தால் வேதனையுடன் விரக்தியான ஹைய் பவ்கெஸ் கத்தோலிக்க மத கொள்கை கொண்ட ஸ்பெய்ன் (Spain) நாட்டிற்குள் தஞ்சமடைந்தார். ஸ்பெனில் தஞ்சமடைந்த ஹைய் பவ்கெஸ் இராணுவத்தில் சேர்ந்து அனைத்து வெடிகுண்டு கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.


எலிசபத்து ராணி 1603ம் வருடம் இறக்கவும் மன்னர் ஜேம்ஸ் 1(King James I) பதவிக்கு வந்ததுடன் மேலும் பல மத சட்டங்களை இறுக்கமாக்கினார். இளமையாகவும் மிடுக்காகவும் இருந்த இவரது சட்டங்கள் மிகவும் கொடூரமாகவும் கடுமையாகவும் இருந்தன. அரசர் ஜேம்ஸ்ஸின் ஆட்சியில் பல கத்தோலிக்க பதிரியரும் (Priests) மரண தண்டனைக்கு உள்ளாகினர். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டிற்குள் இரகசியமாக திரும்பிய ஹைய் பவ்கெஸ் 1604 ம் வருடத்தில் இரவு பொழுதில் மறைவிடம் ஒன்றில் ராபேர்ட் கடெஸ்பி (Robert Catesby) என்பவர் தலைமையில் 7 நபர்கள் கொண்ட குழுவாக தாக்குதல் திட்டத்தினை தீட்டினர். இவர்கள் அனைவரும் தமது திட்டத்தின் இரகசியம் பேண என பைபிள் (Bible) புத்தகம் மீது சத்தியம் செய்தும் கொண்டனர். இவர்கள் திட்டப்படி பாராளு மன்ற தொகுதியுடன் மன்னரையும் அவர் கூட்டத்தினையும் கூண்டோடு அழிப்பதுவும் அரசரின் 9 வயது மகளை ராணியாகவும் ஆக்குவதாயும் இருந்தது. ஏனெனில், அரசன் தனது மகளை ஸ்பானிய நாட்டின் இளவரசரருக்கு (இவர் கத்தோலிக்கர்) திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. மேலும், அரசருக்கு இரு மகன் மார் இருந்தபோதிலும் இவர்களையும் குண்டு வெடிப்பில் கொல்வதாயும் திட்டமிட்டனர். இவர்கள் திட்டப்படி அனத்தும் நிறைவுறும் தறுவாயில் புதிய ஆட்சி கத்தோலிக்க மதம் தழுவியதாக இருக்கும் எனவும் உறுதியாக நம்பினர்.


16ம் நூற்றாண்டில் பிரித்தானிய நாடாளுமன்றம் மிகவும் நெருக்கமான வீட்டு தொகுதி மத்தியில் இருந்ததால் தீவிரவாதிகளுக்கு சதகமாகவே நிலைமைகள் இருந்தது. திட்டமிடலின் பிரகாரம் ஹைய் பவ்கெஸ் தனது பொய்யான ஆள் அடையாளமுடன் ஒரு வீட்டினை பாரளுமன்ற சுவருடன் வாடகைக்கு எடுத்தும் கொண்டார். வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து இரகசிய குகை மூலமாக பாரளுமன்ற தொகுதியின் நில அறையையும் அடையாளம் கண்டு கொண்டனர். அடையாளம் காணப்பட்ட நில அறையானது குளிர்காலத்திற்கான நிலக்கரி, விறகு சேமித்து வைக்கும் இடமாகவும் இருந்தது. இந்த இடம் நோக்கி மொத்தம் 36 பீப்பாய் (Barrel) வெடிமருந்து கொள்கலங்கள் தேம்ஸ் நதி மூலமாக கரு இருளில் படகு மூலம் சேர்த்தும் விட்டிருந்தனர்.


1605 ம் ஒக்டோபர் மாதம் வெடி பொருள் தயார் நிலையில் இருந்த வேளையில் கத்தோலிக்க மத விசுவாசியான நாடாள்மன்ற உறுப்பினர் ஒருவர் புதிய பாரளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க அனாமதேய கடிதம் மூலமாக எச்சரிக்கப் படுகின்றார். கத்தோலிக்க மத விசுவாசியானவர் தனது கடிதத்தினை மன்னருக்கு தெரியப்படுத்தவும் மன்னர் உசாராகினார். மன்னரானவர் கடிதம் அர்த்தம் கருதி உடனடியாக தமது காவலாளிகளையும், சிப்பந்திகளையும் நாடாளுமன்றம் சுற்றிலும் மூலை முடுக்கு அனைத்திலும் தேடுதலுக்கு உத்தரவிடுகின்றார். மன்னரின் உத்தரவால் கடுமையான தேடுதல் வேட்டை பலமணி நேரம் தொடர்ந்தது.


1605 ம் நவம்பர் காலையில் பாராளுமன்ற நில அறையில் வெடி மருந்தில் எரியூட்டும் தறுவாயில் இருந்த ஹைய் பவ்கெஸ் கைதானார். கைது செய்யப்பட்ட ஹைய் பவ்கெஸ் Tower of London இல் வைத்து சித்திரவதை செய்யப்பட்டார். சித்திரவதையின் பின்னதாக உண்மைகளை ஒப்புக்கொண்ட ஹைய் பவ்கெஸ் தனது சக அங்கத்தவர் மறைவிடத்தினையும் காட்டிக்கொடுத்தார். மறைவிடத்தில் இருந்த உறுப்பினர்கள் நான்கு பேர் தப்பியோடும் வேளை சுட்டுக்கொள்ளப்பட மிகுதிப்பேர் உயிராகவும் பிடிபட்டனர். உரிருடன் பிடிபட்டவர் அனைவருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டதுடன் அனைவரும் சிரச்சேதம் செய்யப்பட்டனர். மேற்படி சதியில் ஈடுபட்ட ஏழு பேரின் தலைகளும் கூரிய கம்பங்களில் செதுகப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர். இந்த மத மோதலில் அரசு வென்ற செய்தியும் தீவிரவாதிகள் தோற்ற செய்தியும் இங்கிலாந்து நாட்டின் நவம்பர் 5 ம் திகதிய வான வேடிக்கை பண்டியையாக நினைவுகூர்வது குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்படி சம்பவம் அம்பலமாக காரணமான அனாமதேய கடிதம் காரணமாக இருந்தவர்கள் இன்றுவரை அறியப்படாத போதிலும் கடிதத்தினை தெரியப்படுத்திய உறுப்பினர் மன்னரினால் கெளரவிக்கப்பட்டதுடன் விலைமதிக்கமுடியாத சொத்துக்களும் வழங்கப்பட்ட விடையமானது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

Last Updated on Monday, 29 November 2010 18:02
 


...

Powered By relatedArticle

.....
உங்களுக்குத் தெரியுமா?
18 January 2012, 08.46 v.s.t.j பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற
இங்கிலாந்து நாட்டின் வருடாந்த வான வேடிக்கை தினம்.(நவம்பர்  5 ம் திகதி)
    இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
பிலிக்கர் ,பேஸ்புக் தளங்களின்  போட்டோ போட்டி.
பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)
Economist "Did you know?"
15 November 2009, 11.01 v.s.t.j பலதும்
Economist
உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில். (புதிய தொழில்நுட்ப
ரஷ்யாவின் முதலாவது புல்லட் ரைன்.
ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
உங்களுக்கு தெரியுமா ? பதிப்பு-2009
உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்
உங்களுக்கு தெரியுமா ?
24 September 2010, 16.47 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
Did You Know...?
15 November 2009, 11.11 v.s.t.j பலதும்
Did You Know...?
செக்ஸில் திருப்தி என்றால் என்ன?
ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
காமம் - இஸ்லாத்தின் பார்வையில்
பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற
உங்களுக்குத் தெரியுமா?
20 July 2011, 09.48 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
ஒரு பிலியன் காலம் முன்னர்
13 June 2009, 09.27 v.s.t.j பலதும்
ஒரு பிலியன் காலம் முன்னர்
உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
இறாத்தல் குறியீடு lb எப்படி வந்தது ?
இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு
உங்களுக்கு தெரியுமா?
10 June 2009, 13.41 v.s.t.j பலதும்
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்) நீங்கள் சீனாவில்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.24 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60
உங்களுக்கு தெரியுமா ?
11 April 2011, 11.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு
இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு. ஒரு குழந்தை
உங்களுக்கு தெரியுமா ?
25 October 2010, 19.27 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ
உங்களுக்குத் தெரியுமா
23 June 2010, 06.42 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா
கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்
உங்களுக்கு தெரியுமா ?
10 September 2010, 12.04 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
'போதை மருந்தைவிட மது மோசம்'
12 November 2010, 08.17 v.s.t.j பலதும்
'போதை மருந்தைவிட மது மோசம்'
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.40 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
சோவியத் ஒன்றியம்  1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்
உங்களுக்கு தெரியுமா ?
02 October 2010, 07.23 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.