பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு PDF E-mail
Written by Eelanation   

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா? அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்தப் பூமி பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாறே எங்கோ அழைத்துச் செல்கிறதே!

evolutionary_move_of_mammalsநினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது.  இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி நம்மைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், என்னைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!

அப்படியாக காலம் நகர்ந்து செல்கின்ற நிலையில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மாற்றம் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாறே சுற்றியிருக்கிறது இப்பூமி.  அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமார் 265 மில்லியன் வருடங்களுக்கு முன் (பெர்மியன் யுகக் கால இறுதியில்)  நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது. அதே காலகட்டம்தான் டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது இப்பூமி.

evolutionary_move_of_mammals_2அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தம்முருவத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே) வாழ்ந்துள்ளன. இவை கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு அக் காலகட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலகட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை வெறும் 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந்நிலையில்தான் இயற்கையின் சீற்றத்தால் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரினத் துடைத்தெடுப்பு நடந்தேறியது. அதனால் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசர்களும் - பறப்பன தவிர்த்து - அழிந்தொழிந்திருக்கின்றன. அந்நேரத்தில் இருந்த பத்து வகைப் பாலூட்டிகளில் ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டன.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்குத் தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே  கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக அனைத்து வகைப் பாலூட்டி இனங்களும் சீற்றம் கொண்டு பல்கிப் பெருகத் தொடங்கிவிட்டது.

அதிலும் குறிப்பாக பேலியோசீன் காலகட்டத்தில் (65-58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகைக் குரங்கினங்களும் தோன்றத் தொடங்கிவிட்டன. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58-40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலகட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் செதுக்கப்பட்டு விட்டன.

evolutionary_move_of_mammals_3

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய மூதாதையர் (வால்/வாலற்றக் குரங்கு)ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களை நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்குப் பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில் உள்ளோம்.  நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே இந்தக் குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சரியப் பூமி என்ற இயற்கை!

 

 

 

 

 

நன்றி:ஈழநேசன் இணையதளம்

Last Updated on Saturday, 14 August 2010 08:49
 


...

Powered By relatedArticle

.....
உங்களுக்குத் தெரியுமா?
18 January 2012, 08.46 v.s.t.j பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற
இங்கிலாந்து நாட்டின் வருடாந்த வான வேடிக்கை தினம்.(நவம்பர்  5 ம் திகதி)
    இங்கிலாந்து நாட்டில் 1605 ம் வருடம் நவம்பர் மாதம் 5 ம் திகதி தொடங்கி
பிலிக்கர் ,பேஸ்புக் தளங்களின்  போட்டோ போட்டி.
பிலிக்கர் (Flickr) எனும் போட்டோ பகிரும் (phpto sharing) இணையமானது 2004 ம் வருடம் ளூடிக்கொப் (Ludicorp)
Economist "Did you know?"
15 November 2009, 11.01 v.s.t.j பலதும்
Economist
உங்களுக்கு தெரியுமா ? வீடியோ விபரணம் தமிழில். (புதிய தொழில்நுட்ப
ரஷ்யாவின் முதலாவது புல்லட் ரைன்.
ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train"
உங்களுக்கு தெரியுமா ? பதிப்பு-2009
உங்களுக்கு தெரியுமா ? - பயிற்றப்பட்ட ஊழியர் பதிப்பு-2009 நீங்கள் தினமும் 1 மின்னஞ்சல்
உங்களுக்கு தெரியுமா ?
24 September 2010, 16.47 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஒரிசா மாநிலத்தில் வங்கக்கடலோரம் கொனார்க் என்னுமிடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில்
Did You Know...?
15 November 2009, 11.11 v.s.t.j பலதும்
Did You Know...?
செக்ஸில் திருப்தி என்றால் என்ன?
ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து
காமம் - இஸ்லாத்தின் பார்வையில்
பாலுறவு சுகம் அனுபவிப்பதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. உடலுறவு என்பதை முகம் சுளிக்கிற
உங்களுக்குத் தெரியுமா?
20 July 2011, 09.48 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா?
13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என்.
ஒரு பிலியன் காலம் முன்னர்
13 June 2009, 09.27 v.s.t.j பலதும்
ஒரு பிலியன் காலம் முன்னர்
உலக வரலாற்றை ஒரு பில்லியன் அளவு கால அலகுகளில் பின்வருமாறும் சொல்லலாம். ஒரு
இறாத்தல் குறியீடு lb எப்படி வந்தது ?
இறாத்தல் எனும் நிறுவை அளவினை ஆங்கிலமொழியில் "பவுண்ட்" எனவும் "lb" எனும் குறியீடு
உங்களுக்கு தெரியுமா?
10 June 2009, 13.41 v.s.t.j பலதும்
உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா ? (வீடியோ அடக்கியுள்ள விடையம் தமிழில்) நீங்கள் சீனாவில்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.24 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
2008 ம் ஆண்டில் சீனா, அமெரிக்கா, நிப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் முறையே 253, 220, 94, 60
உங்களுக்கு தெரியுமா ?
11 April 2011, 11.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
மரு. சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் "மருத்துவத் தமிழ் முன்னோடி" என
பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு
இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.54 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
காற்பந்தாட்டம் உலகில் அதிகப் பேரால் விளையாடப்படும் விளையாட்டு. ஒரு குழந்தை
உங்களுக்கு தெரியுமா ?
25 October 2010, 19.27 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ
உங்களுக்குத் தெரியுமா
23 June 2010, 06.42 wiki பலதும்
உங்களுக்குத் தெரியுமா
கிரெசுக்கோகிராப் (crescograph) என்ற கருவி தாவரங்களின் வளர்ச்சியை அளக்க உதவுகிறது; இதைக்
'பூகம்பத்தை முன்கூட்டியே அறியும்' தேரைகள்
பூகம்பம் வரப்போவதை முன்கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உள்ளது என அறிவியல்
உங்களுக்கு தெரியுமா ?
10 September 2010, 12.04 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
நேபாள நாட்டின் கொடி ஒன்று மட்டுமே உலக தேசியக் கொடிகளில் செவ்வக வடிவமாக இல்லாத
'போதை மருந்தைவிட மது மோசம்'
12 November 2010, 08.17 v.s.t.j பலதும்
'போதை மருந்தைவிட மது மோசம்'
ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும்
உங்களுக்கு தெரியுமா ?
24 January 2010, 09.40 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
சோவியத் ஒன்றியம்  1945 ஆம் ஆண்டில் இருந்து 1991 ஆம் ஆண்டில் இல் கலைக்கப்படும்வரை உலகின்
உங்களுக்கு தெரியுமா ?
02 October 2010, 07.23 wiki பலதும்
உங்களுக்கு தெரியுமா ?
இந்திய நாளிதழ்களிலேயே முதன் முறையாய்க் கேலிச் சித்திரம் வெளியிட்டவர் மகாகவி
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.