ரஸ்ய நாடு மக்கள் போக்குவரத்திற்காக அதிவேக தொடர்வண்டியான "புல்லட் ரைன்-Bullet Train" சேவையை முதல்முதலாக தொடக்கியுள்ளது. அதிதொழில் நுட்பம் உடையதும் அதிவேகம் கொண்டதுமான புதிய பயணத்தை முதல்கட்டமாக மஸ்கோ (Moscow) விற்கும் சென்பீற்றஸ்பேர்க் (St.Petersburg) இடையிலான 650 கிலோ மீற்றர் தூரத்தை மூன்றரை மணித்தியாலங்களில் பயணிப்பதற்காக "சப்சன்" (Sapsan) எனும் இராட்சத தொடர்வண்டி சேவையை 2009ம் ஏப்ரலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது மணிக்கு 291 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கின்ற போதிலும் இதனை மேலும் எதிகாலத்தில் அதிகரிக்க (300 km/h) திட்டமிட்டுள்ளனர். விமானத்தை விடவும் பாதுகாப்பானதும் பொதிகளுக்கான கட்டுப்பாடு இல்லாததுமான இதன் சேவையை எதிகாலத்தில் விமானத்தை விடவும் குறைவான நேரத்தில் பயணிக்ககூடியதாக விஸ்தரிக்கவும் ரஸ்யரயிவே தீர்மானித்துள்ளது.
குறிப்பு:-
சப்சன் என்பது ரஷ்யா மொழியில் வல்லூறு (Peregrine Falcon) எனும் பறவை இனத்தினை குறிப்பதாயுள்ளது. உலகில் உள்ள உயிரினங்களில் (விலங்கு,பறவை) மிகவும் வேகமாக பயணிக்கவல்ல இந்த வல்லூறு பறவை மணிக்கு 350 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கவல்லது.
விசேட இணைப்பு:
அதிவேக தொடர்வண்டியான புல்லட் ரைன் பற்றிய மேலதிக தகவல்.
இங்கே அதிவேக தொடர்வண்டி ஆய்வு ஒலி வடிவில் கேட்கலாம்.
பிரத்தியேக வடிவமைப்பு உள்ள பொதிகளினை சுமந்து செல்லும் (commercial trains)புல்லட் ரைன் சேவை.
புல்லட் ரைன் எனப்படும் அதிவேக தொடர்வண்டி தொடர்பில் சர்வதேச அளவில் ஒரு வரைவிலக்கணமும் இதுவரை இல்லாத போதிலும் சாதாரண சராசரி வேகத்தினை விடவும் குறித்த அளவின் மேல் பயணிப்பன இதில் அடக்கப்படும். உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவிலக்கணம் என்பது பழைய தொடர்வண்டி பாதையில் மணிக்கு 200 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவும், புதிய பாதையில் 250 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவும் அதிவேக தொடர்வண்டி வகையில் அடக்கப்படும். இதே போல் அமெரிக்காவில் மத்திய போக்குவரத்து வாரியம் 125 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவற்றினையும் மாநிலங்களவை 110 கிலோ மீற்றர் மேல் பயணிப்பனவும் அதிவேக தொடர்வண்டி வகையில் அடக்கப்படும். இவ்வாறு அதிவேக தொடர்வண்டி தொடர்பில் மாறுபட்ட வரையறை இருந்து வருகின்றது.
யப்பானியச் சொல்லாகிய DANGAN RESSHA என்பதுவே ஆங்கிலத்தில் நேரடி அர்த்தமாக BULLET TRAIN எனும் சொல் அதிவேக தொடர்வண்டிகளை குறிக்கின்றது. தற்போது யப்பானில் SHINKANSEN எனும் யப்பானிய சேவை அதிவேக தொடர்வண்டிகளை குறிக்கின்றது.
உலகின் முதலாவது புல்லட் ரைன் எனப்படும் அதிவேக தொடர்வண்டி பயணிகள் சேவையானது 1964ம் ஒக்டோபர் 1ம் திகதி யப்பானிய நாட்டில் தொடங்கியது.
உலகின் முதலாவது பொதிகளினை சுமந்து செல்லும் (commercial trains)புல்லட் ரைன் சேவையானது 2009ம் டிசம்பர் 26ம் திகதி சீன நாட்டினால் ஆரம்பிக்கப்பட்டது.