முழு பக்கம
தாஜ்மஹால் தொடர்புடைய விடையம்
User Rating: / 85
PoorBest 
Written by v.s.t.j   
Tuesday, 09 June 2009 11:12

மேலுள்ளபடத்தில் தாஜ்மஹாலின் முகப்பு தோற்றமும் கீழுள்ளதில் இரு சமாதிகளும் உள்ளன.

இந்தியாவில் பிரித்தானியர் வருகை.............( தாஜ்மஹால் தொடர்புடைய விடையம்)


இந்தியாவில் 1857 ம் வருடம் கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரித்தானிய சிப்பாய்களும் அரச உத்தியோகத்தர்களும் தாஜ்மஹால் உட்சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த பல விலைமதிக்க முடியாத நவரத்தின கற்களை சூறையாடினர். பின்னர் 20 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆளுனராக இருந்த ஆங்கிலேயர் Lord Curzon இன் உத்தரவில் தாஜ்மஹால் மீள்நிர்மானம் செய்யப்பட்டு 1908 இல் இன்றுள்ள பொலிவை பெற்றது. மேலும் தாஜ்மஹால் சுற்றுச்சூழலில் ஷாஜஹான் வடிமைத்த இயற்கை வனப்பு ( பூந்தோட்டம்,நீர்நிலை கீழ் உள்ள வீடியோவில் உள்ள மாதிரி) முழுவதும் பிரித்தானிய சாயலுக்கு முழுமையாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலுள்ள சம்பவம் தவிர பின்னைய காலங்களில் தாஜ்மஹால் மிகவும் பாதுகாக்கப் படலாயிற்று. 1942 இல் இரண்டாம் உலகப்போரின் காலத்திலும் பின்னர் 1965-1971 பாக்-இந்திய போரின் காலத்திலும் தாஜ்மஹால் முழுமையாக மறைக்கப்பட்டது.

 

  • பிற் குறிப்பு:
    • ஷாஜஹான் இந்தியாவிலுள்ள லகூர் (Lahore) பிரதேசத்தில் 1592 ம் வருடம் ஜனவரி 5 ம் திகதி பிறந்தார்.
    • முகால சாம்ரஜ்யத்தின் 5 வது பேரரசராக 1628 பெப்ரவரி 4 இல் முடிசூடினார்.
    • ஷாஜஹான் 1612 மே 10இல் "ஆர்ஜுமண்ட் பனு பெகும்" எனும் இயற்பெயர் உடைய மும்டஜ் மஹலை மணம் முடித்தார்.
    • 1658 ம் வருடம் கடும் சுகவீனமுற்ற பேரரசனின் ஆட்சியை 4 மகன் களில் ஒருவராகிய "அவுரன்ஷெப்" (Aurangzeb) பறித்தெடுத்தான். [குறிப்பு : ஷஜாவை விடவும் அவுரன்ஷெப் ஆட்சியில் கட்டப்பட்ட பல பிரபல்யமான கோட்டைகள், இஸ்லாமிய கட்டிடங்கள் இந்தியாவில் இப்போதும் உள்ளன.]
    • பதவிகவிழ்க்கப்பட்ட ஷாஜஹான் இறக்கும் வரை அக்ராவில் உள்ள கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.
    • ஷாஜஹானின் இரு அன்புபுதல்விகளின் கண்காணிப்பில் சிறையில் இருந்த மாமன்னர் கோட்டை யன்னல் வழியாக தாஜ் மஹலை பார்த்தவண்ணம் இறுதிநாட்களை அர்ப்பணித்தார்.
    • 1666 ம் வருடம் பெரவரி 4இல் உயிர் துறந்த ஷாஜஹான் உடல் "அவுரன்ஷெப்" கட்டளைப்படி மும்டஜ் கல்லறையின் அருகில் புதிதாக கட்டப்பட்ட கல்லறையில் புதைக்கப்பட்டது.
    • மேற்படி புதிய கல்லறை உருவாகியதன் மூலமாக தாஜ்-மஹாலின் உட்பகுதியின் ஒட்டுமொத்த சமச்சீர் குலைந்ததாகவும் சொல்லப்படுகின்றது (மேல் உள்ள படத்தில் காணலாம்).
    • மிகப்பெரிய நிலப்பகுதியை ஆட்சிசெய்துள்ளது முகாலய சாம்ரஜ்யம் பெரும் செல்வச்செழிப்புடையதாகவும் இருந்துள்ளது. நவீன இந்தியாவின் பத்தில் ஒன்பது பகுதியான 3,000,000 சதுர கிலோமீற்றர் பரப்பு முகாலய ஆட்சிக்கு உட்பட்டிருந்தமை சாம்ரஜ்யத்தின் வலிமையையும் ஆளுமையையும் பறைசாற்றுவதாயுள்ளது.
Last Updated on Thursday, 07 March 2013 18:03
 
«StartPrev12NextEnd»

Page 1 of 2