"பனாமா கால்வாய்" PDF E-mail
User Rating: / 60
PoorBest 
Written by v.s.t.j   

உலகின் அதிசயங்களில் ஒன்றாக பலகாலம் தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டுமானமாக "பனாமா கால்வாய்" உள்ளது. 400 வருடம் மேலான வரலாறு கொண்டுள்ள பனாமா கால்வாயின் சரித்திரம் சிலபக்கங்களில் சொல்லக்கூடியதல்ல என்பதுடன் அதன் பின்னால் உள்ள துன்பியல் சம்பவம் எழுத்துக்களில் விபரிக்கக்கூடியனவும் அல்ல. இருந்தபோதிலும் மனித சமூகத்தின் மிகப்பெரிய பொறியியல் சாதனை எனும் நோக்கில் விடையமானது இப்பகுதியில் நோக்கப்படுகின்றது.


கப்பல் போக்குவரத்தில் அத்திலாந்திக் சமுத்திரம், பசுபிக் சமுத்திரம் என்பவற்றினூடான குறு இணைப்பானது பனாமா நாட்டின் கால்வாய் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்திலாந்திக் பகுதியில் உள்ள கப்பல்கள் கொலொன் (Colon) பகுதியினூடாக 7.7 மைல்கள் பயணித்து கடுன் (Gatun) எனும் இடத்தினை அடைந்ததும் 3 தடுப்பு தொட்டிகளினூடு கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு 32 மைல்கள் வரை பயணித்து மறுகரையிலுள்ள கைல்லர்ட் (Gaillard) பகுதியில் மூன்று தடுப்புத் தொட்டிகள் உதவியுடன் கடல்மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு மிரஃப்லொரெஸ் (Miraflores) பிரதேசமூடாக 11 மைல்கள் பயணித்து பசுபிக் சமுத்திரத்தில் பயணிக்கின்றன. மேற்படி போக்குவரத்து இருவழி பயணத்திற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளதால் பசுபிக் பகுதியில் உள்ள கப்பல்கள் அத்திலாந்திக்கினை இதேபாதையூடு பயணிக்க கூடியதாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பலநூறு வருடங்களாக மனிதன் இயற்கையுடன் போராடி வெற்றி கொண்ட கால்வாய் கட்டுமானமாகிய "பனாமா கால்வாய்" பின்னணியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பிரமிக்கும் விடையங்கள் மிகச்சுருக்கமாக பின்வருமாறு உள்ளது.

 

  • பனாமா நாட்டிலுள்ள 51 மைல்கள் நீளமான இருவழி பயணப் பாதைகளையும் மூன்று படிமுறை உயரங்களையும் கொண்டதுமான பனாமா கால்வாயானது பலவருட கட்டுமானத்தின் பின்னர் 1914ம் வருடம் ஆகஸ்ட் 15ம் திகதி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.
  • பனாமா கால்வாயின் முக்கிய கட்டுமான வேலைகள் அமெரிக்க அரசினால் 1904ம் -1914ம் வருடப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. கட்டுமான வேலைகளில் தினமும் சராசரி 44,000 வேலையாட்கள் முழுநேரம் கடமையாற்றினர். (தென்னமெரிக்க பிரதேசத்தில் 16ம் நூற்றாண்டில் முதல்முதலாக ஸ்பானிய ராஜ்யம் ஆரம்பித்த பனாமா கட்டுமன திட்டங்களை பின்னிணைப்பில் பார்வையிடவும்.)
  • வளைந்தும் நெளிந்தும் செல்லும் பனாமா கால்வாய் குறைந்தபட்சம் கடல்மட்டத்தில் இருந்து 290அடி ஆழத்திலும் அதிகபட்சம் 275அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
  • பனாமா கால்வாயின் பெரும்பகுதி சீமெந்தினால் கட்டப்பட்டதாகும். கால்வாய் கட்டுமானத்திற்கு என அமெரிக்காவில் இருந்து கப்பல் மூலமாக 5 மில்லியன் தொன்!(கற்பனை செய்ய முடிகிறதா?) சீமெந்து பனாமாவிற்குள் எடுத்துவரப்பட்டது.
  • பனாமா கால்வாயின் இரு மருங்கிலுமுள்ள மூன்று சோடி தொட்டிகளும் சீமெந்தினால் கட்டப்பட்டுள்ளன. தொட்டிகள் யாவும் சீமெந்தினால் செய்யப்பட்ட இராட்சத கதவுகளையும் கொண்டுள்ளன. இந்த கதவுகள் அகன்ற "V" வடிவில் மூடித்திறக்கின்றன. ஒவ்வொரு கதவுகளும் சராசரி 750 தொன் எடை கொண்டனவாகும். மேலும் கதவுகள் ஒவ்வொன்றும் 64அடி அகலமும் 7அடி (உங்களின் உயரத்தினை விடவும் அதிகம் என்பதனை கவனிக்க.) தடிப்பும் உடையனவாகவும் உயரங்கள் 47அடி, 82அடி என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கதவுகள் 20அடி விட்டமுள்ள பிணைச்சலினால் தாங்கப்படுகின்றன. கதவுகள் அனைத்தும் மிசாரத்தின் உதவியுடன் மூடித்திறக்கின்றன. தொட்டிகள் ஒவ்வொன்றும் 33.5 மீற்றர் (110அடி) அகலமும் 304.8 மீற்றர் (1000அடி) நீளமும் உள்ளனவாகும்.
  • ஒரு கப்பலானது பனாமா கால்வாய் கடப்பதற்கு சராசரி 52 மில்லியன் கலன்! நீர் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு தொட்டிகளிலும் நீர் (தண்ணீர்) அளவானது உயர்த்த அல்லது தாழ்த்த (குறைக்க) எடுக்கும் நேரம் சராசரி 15 நிமிடங்களாகும். தொட்டிகளினூடு பயணிக்கும் கப்பலானது சராசரி 85அடி உயரத்திற்கு உயர்த்த அல்லது தாழ்த்தப் படுகின்றது. பனாமா கால்வாயினை முழுமையாக கடக்க 8 தொடக்கம் 10 மணி நேரம் எடுக்கின்றது (சாதனை நோக்கத்திற்காக அமெரிக்க கடற்படையின் விசைப்படகு 2மணி 41நிமிடங்களில் கடந்தது செய்தி). இரண்டு மிகப்பெரும் சமுத்திரங்களினை ஊடறுத்து பனாமா கால்வாயில் பயணிப்பதன் மூலம் 40 மடங்கு நேரம் மிச்சமாகின்றது!
  • கால்வாயூடு கப்பல்களை உயர்த்த அல்லது தாழ்த்தப் பயன்படுத்தப்படும் நீரானது எந்தவிதமான இயந்திரமும் பயன்படுத்தாது புவியீர்ப்பின் உதவியுடன் மட்டுமே உபயோகிக்கப்படுகின்றது.
  • அதிகளவில் ஈர வலைய காடுகளைக்கொண்ட பனாமாவின் ஆண்டு மழைவீட்சி 105 அங்குலமாகவும் சராசரி வெப்பம் 80 பாகை F ஆகவும் உள்ளது. மேலும் அதிகமழைவீட்சி காரணமாக கால்வாயின் சுற்றுவட்டகையில் உள்ள நீர்த்தேக்கிகள் (அணைக்கட்டுக்கள்) ஒரேதினத்தில் 15அடி மேல் நீர்மட்டம் உயர்வதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி இயற்கையில் கொட்டும் மழைநீரானது கப்பல் போக்குவரத்தில் விரையமாகும் தண்ணீரினை ஈடுசெய்கின்ற விடையம் கால்வாயின் விசேட தன்மையாகும். பனாமா பிராந்தியத்தில் மாபெரும் அணைகளில் சேமிக்கப்படும் மழைநீர் கப்பல்களை உயர்த்தவும் , நீர் மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகின்றது. பனாமா பிரதேசத்தின் இத்தகைய இயற்கையின் கடும் மழைவீட்சி பலநூறு வருடங்கள் தொடர்ந்த கட்டுமான வேலைகளின்போது மாபெரும் இடையூறாகவும் இருந்தது கவனிக்கத்தக்க விடையம்.
  • பனாமாவின் தொட்டிகளில் நிறுத்தப்படும் கப்பல்கள் 800அடி நீளமான உருக்கு தடம் உதவியுடன் இழுத்துச்செல்லப்படுகின்றன. தொட்டியின் கதவுகளை பாதுகாக்கும் நோக்கில் தான் இலகு பொறிமூலம் கப்பல்கள் வலிக்கப்படுகின்றன. கப்பல்களை இழுப்பதற்கு பாவிக்கப்படும் பொறி முலெஸ் ரைன் (Mules Train) எனப்படும்.
  • வரலாற்று குறிப்புக்களின்படி பனாமா கட்டுமான காலங்களில் விபத்துக்கள், தொற்றுநோய்கள், தற்கொலைகள் காரணமான மனித உயிர்களின் மொத்த இழப்பு ஒரு இலட்சத்திலும் அதிகமாகும்!. கால்வாய் கட்டுமானத்தினை தவிர பனாமா புகையிரதபாதை (47.6 மைல்) கட்டுமான வேலைகளில் ஒவ்வொரு அடி தூரத்திற்கும் ஒரு மனித உயிர் இழப்பு! விகிதத்தில் இருந்ததாக வரலாற்று பதிவு குறிப்பிடுகின்றது. மேலும் பனாமா கால்வாய் கட்டிமுடிக்கப்படும் வரை கப்பல் பொருட்கள் புகையிரத சேவைமூலம் பாரியளவில் பரிமாறப்பட்டன. அத்துடன் அமெரிக்காவின் வெற்றிகரமான பனாமா கட்டுமான பணிகளில் புகையிரத சேவை மிகவும் உதவியது குறிப்பிடக்கூடிய விடையம்.
  • பலமில்லியன் டொலர் செலவில் பல நாடுகளினால் முயற்சிக்கப்பட்ட பனாமா கால்வாய்த் திட்டமானது அமெரிக்க நாட்டினால் நிறைவுசெய்யப்பட்டது மாபெரும் சாதனையாக இன்றும் பேசப்படுகின்றது. அமெரிக்கா மட்டும் அன்றய காலத்தில் 380மில்லியன் டொலர்கள் அளவில் செலவு செய்து வெற்றிகரமாக கட்டுமானத்தினை பூர்த்தி செய்திருந்தது. அமெரிக்காவின் அத் தொகை பல பில்லியன் டொலர்களுக்கு இன்று சமமாவதுடன் அன்றய காலப்பகுதியில் 5 டொலர்கள் ஒரு ஸ்ரேலிங்க் பவுணுக்கு சமமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்க செய்தி.
  • பனாமா கட்டுமான காலத்தில் அகழப்பட்ட (தோண்டப்பட்ட) மண், கல், பாறை என்பவற்றின் தொகை வரலாற்றில் என்றுமில்லாத அளவாகும். மேற்படி அகளப்பட்ட அளவானது பூமியின் ஒரு அந்தத்தில் இருந்து மறு அந்தம் வரை 16.2 சதுர அடி பரப்புள்ள துளை இடுவதற்கு சமமானதாக ஒப்பிட்டுச் சொல்லப்படுகின்றது!.
  • கால்வாயின் இரு அந்தங்களிலும் 16அங்குல விட்டமுள்ளதும் 20 மைல்கள் எறி வீச்சுள்ளதுமான பீரங்கிகள் நிலையாக நிறுவப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இந்த பீரங்கிகள் இன்றுவரை சுடுவதற்கு பாவிக்கப்படும் நிலை ஏற்ப்படவும் இல்லை.
  • அமெரிக்கா கால்வாய் கட்டுமானத்தில் பெருமளவு வெடிமருந்தினை (டைனமைற்) பாவித்திருந்தது. கட்டுமானத்திற்கு பாவிக்கப்பட்ட வெடி பொருளின் மொத்த தொகை 27,000 தொன்! சுமை  எனவும் இவை அனைத்தும் கப்பல் மூலமாக அமெரிக்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டும் இருந்தது.
  • பனாமா கட்டுமானத்தில் பெயர் சொல்லக்கூடிய தனிநபர் பங்களிப்பு இல்லாத போதிலும் புனௌ-வரில்ல(Bunau-Varilla) மிகவும் முக்கியமானவராக வரலாறு குறிப்பிடுகின்றது. பிரஞ்சு நாட்டினை சேர்ந்த மேற்படி நபர் பனாமா உதயமாகவும் ,கால்வாயானது அமெரிக்காவினால் கட்டிமுடிப்பதற்கும் காரணமானவர்.
  • வருடம் பூராகவும் 24மணி நேரமும் இயங்கும் கால்வாயினூடு பயணிக்கும் கப்பல்களில் 68% மானவை அமெரிக்காவுக்குள் பயணிப்பவையாகும். கால்வாய் காரணமாக அமெரிக்க கடல்பயணம் 7,800 மைல் தூரத்தினால் மீதமாகின்றது.
  • கப்பல் கட்டணத்தில் சாதனையாக 1995ம் வருடம் பனாமா கால்வாயினூடு பயணித்த அரசகுடும்பத்தின் கப்பலானது 141,349 டொலர்களினை செலுத்தியது மிக அதிக கட்டணமாகவும்; 1928இல் மிக குறைந்த கட்டணமாக 0.36 டொலர் கட்டணம் நீச்சல் வீரர் நீந்திக்கடந்த வேளையிலும் செலுத்தியதும் விசேட தகவல்.
  • பனாமா கால்வாயினூடு 1914 இலிருந்து 2005ம் வருடம் வரை 922,000 மேலான கப்பல்கள் பயணித்துள்ளன. 1994 ம்வருடத்தில் மட்டும் 14,029 கப்பல்கள் பயணித்துள்ளதுடன் 419 மில்லியன் டொலர்களினை கட்டணமாகவும் செலுத்தியுள்ளன.
  • 1903ம் வருடம் முதல் தனது கட்டுப்பாட்டில் பனாமா கால்வாய் பிரதேசத்தினை வைத்திருந்த அமெரிக்காவானது 1977இல் கைச்சாத்தான பனாமாவுடனான ஒப்பந்தம் பிரகாரம் 1999ம் டிசம்பர் 31இல் பனாமாவிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைத்தது.
  • நூறுவருட சேவையின் பின்னர் அமெரிக்காவின் 1999ம் வருட கையளிப்பின் பின்னதாக பனாமிய அதிகாரசபையினால் நிர்வாகிக்கப்படும் பனாமா கால்வாய் புதிய விஸ்தரிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளது. தற்காலத்தில் பெருகிவரும் நவீன இராட்சத கப்பல்களையும் கால்வாய் உள்வாங்கும் வண்ணம் கால்வாய் கட்டுமானத்தினை மீள்நிர்மானம் செய்யவென பனாமா அரசு நடாத்திய சர்வஜன வாக்கெடுப்பு 80% ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன்படி நவீனமானதும் மிகவும் விரிவானதுமான கால்வாய்க் கட்டுமானப் பணிகள் 2007ம் வருடம் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
  • புதிய பனாமா கால்வாய் மிகவும் நவீன தொழில்நுட்பங்களினை உள்ளடக்கியதாகவும் கதவுகள் அனைத்தும் பக்கவாட்டில் அசையும் வண்ணமும் வடிவமைக்கப்படவுள்ளன. திட்டமிடப்பட்டுள்ள கட்டுமானமானது 40,000 பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளது. புதிய கட்டுமானத்திற்கான உத்தேச செலவு 5.25 பில்லியன் டொலர்கள் என்பதுடன் கட்டுமான பணிகள் 2014ம் ஆண்டு நிறைவு பெறும் எனவும் சொல்லப்படுகின்றது. மேலும் கட்டுமானத்திற்கு வேண்டிய பணம் அனைத்தும் கப்பல் போக்குவரத்து கட்டணம் மூலம் பெறப்படவுள்ளது.
  • வருடம் பூராகவும் 24மணிநேரமும் திறந்திருக்கும் பனாமாவூடான கப்பல் சேவை வரலாற்றில் மூன்று தடவை மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மூடப்பட்ட தடவைகளாவன முறையே 1915, 1989, 2010ம் (டிசம்பர் 8ம் நாள்) என்பனவாகவும் இவைகள் மண்சரிவு, அமெரிக்க ராணுவ தேவை, கடும் மழை காரணமாகவும் இருந்ததும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
  • எழிலும், பசுமையும், வனப்பும், விபரிக்கமுடியாத இயற்கையும் ஒருங்கே கொண்டுள்ள பனாமாவினை கப்பல்களில் பயணிக்கும் போதே ரசிக்கும் பயணிகள் பனாமா நாட்டின் சுற்றுலா பயணியாக வாழ்நாளில் ஒருமுறை தன்னும் வர தூண்டும் பசுமைப்பூமி.
  • 400வருடம் மேலான கால்வாய் பணிகளின் பயனினை தற்போது பனாமா நாடு அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. பனாமா நாட்டின் தேசிய வருவாயில் மிகப்பெரும் பங்களிப்பு (வருடாந்தம் 2 பில்லியன் டாலர் மேலான வருமானம்) செய்யும் பனாமா கால்வாய் சர்வதேச கடல்பயணங்களின் மையமாக இருந்து வருகின்றது.


பனாமா கால்வாய் தொடர்பிலான மேலதிக வரலாற்றுத் தகவல்.

பனாமா கால்வாய் - மேலதிக தகவல்.

தொடர்புள்ள தளங்கள்.

Live Web Cam (நேரடி ஒளிபரப்பு காட்சிகள்)1

LiveWebCam2 (நேரடி ஒளிபரப்பு காட்சிகள்)

Panama canal

பனாமா கால்வாயில் கப்பல் பயண விளக்கம்.(வீடியோ)
பனாமா கால்வாயில் கப்பல் பயண விளக்கம்.(அசையும் படம்)

science.discovery.com

புதிய பனாமா கட்டுமான விளக்கம் (வீடியோ)

New Panama_Canal-discovery.com

"The Panama canal"

 

Last Updated on Friday, 20 April 2012 07:08
 


...

Powered By relatedArticle

.....
ஆடம்பர உல்லாச தீவுகள்- Palm Islands
(காட்சி :ஆடம்பர உல்லாச செயற்கை தீவுகளின் ஒருபகுதி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள................
"பனாமா கால்வாய்" 20 April 2012, 07.08 Janakan
உலகின் அதிசயங்களில் ஒன்றாக பலகாலம் தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டுமானமாக................
உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான HKIA தொடர்பான படங்கள் மேலே உள்ளன. இந்த................
  மனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா................
வானியல் ஆராட்சியின் புரட்சிகர சாதனம் வானியல் தொலைநோக்கி "ஹபிள்" (Hubble). வளிமண்டல மாசு................
ஐபீல் கோபுரம் -Eiffel Tower
பிரஞ்சு நாட்டில் உள்ள ஐபீல் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ம் திகதி திறக்கப்பட்டது. இது................
உலகின் மிகப்பெரிய நகரும் (ஊரும்) இயந்திரம்.
மனிதனின் தேவைகள் தினம்தினம் அதிகரிக்கும் வேகத்தில் தொழில் நுட்பமும் அதுசார்ந்த................
'பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல்'
ஐக்கிய அரபுராச்சிய ( டுபை -Dubai ) மக்களின் விருந்தோம்பலின் சின்னம் பேர்ஜ்-அல்-அரப்................
"டைடானிக்" கப்பல் 21 March 2013, 17.11 Janakan
  "டைடானிக்" - தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம். முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில்................
'அகாசி கைக்ஜோ' உலகின் மிக நீளமான தொங்கு பாலம்.
படத்தில் காணப்படுவது யப்பான் (Japan) நாட்டில் அமைக்கப்பட்டுள்ள "அகாசி கைக்ஜோ" (Akashi Kaikyo)................
'மதுரை மீனாட்சி கோவில்'
மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டின் 2 வது பெரிய நகரமும் 2,500 ஆண்டுகள் பழைமை................
உலகப் புகழ்
1974 ம் வருடம் ஹங்கேரி (Hungary) நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ................
'தாஜ் மஹால்' 28 July 2011, 18.09 Janakan
'தாஜ் மஹால்'
அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில்................
உலகில் பிரமாண்ட அளவிலும் செலவிலும் நடைபெறும் ஆய்வு.
உலகின் மிகப்பெரியதும் மிகவும் செலவுகூடியதுமான விஞ்ஞான பரிசோதனை LHC (Large Hadron Collider) எனும்................
தஞ்சை பெரிய (பிரகதீஸ்வரர்) கோவில்.
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய (பெருவுடையார்) கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆச்சரியமான................
உலகின் மிக உயரமான கட்டிடம்-
பேர்ஜ் கோபுரம் (Burj Tower) [முக்கிய குறிப்பு: "பேர்ஜ் டுபாய்" தற்போது "பேர்ஜ் கலீஃபா" (Burj................
உலகின் சாதனை நிகழ்வுகளை பதிவு செய்யும் அதிகாரபூர்வ ஏடாகிய கின்னஸ் புத்தகம் (Guinness World................
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.