'மதுரை மீனாட்சி கோவில்' PDF E-mail
User Rating: / 94
PoorBest 
Written by v.s.t.j   

மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டின் 2 வது பெரிய நகரமும் 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததுமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தினை 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' கோவில் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது .

மீனாட்சி தெய்வத்திற்கு முதன்மையும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தின் பின்ணணி 800 வருடங்கள் மேலான சரித்திர வரலாறு கொண்டது (6வது நூற்றாண்டில் அரசாண்ட பாண்டிய மன்னன் குலசேகரன் இந்த நகரத்தை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது). மதுரை மீனாட்சி கோவில் பாண்டியர் ஆட்சிக்குள் மதுரை உட்பட்டிருந்த காலத்தில் உருவாக்கபட்ட போதிலும் தற்போது இருந்து வரும் கட்டிட அமைப்பு நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட 17ம்-18ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப் பட்டதாக கோவிலின் வரலாறு குறிப்பிடுகின்றது. பல நூற்றாண்டு கட்டிட தொன்மையுள்ள மீனாட்சி கோவிலானது திராவிட நாகரீகத்திற்கும், சிற்ப கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. மிகவும் பழம்பெரும் தொன்மையும் , நீண்ட நெடிய வரலாறுச்சிறப்பும், உலக புகழ் மிக்கதுமான மதுரை மீனாட்சி கோவில் தொடர்பிலான சிறு தகவல்கள் வருமாறு.

  • 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி , சுந்தரேஸ்வரர் விகிரக வடிவில் பூரிக்கப்படுகின்றன.
  • மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி"எனவும் அழைக்கின்றனர்.
  • மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீற்றர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீற்றர் நீளமும் 237 மீற்றர் அகலமும் கொண்டுள்ளது.
  • இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்டுள்ளது.
  • ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது. மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
  • மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
  • ஆலயத்தின் உள்ளக தூண்கள் சிறந்த கலைநுணுக்க சிற்ப வேலைப்பாடுகளுடனும் இசை மீட்கத் தக்கனவாகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
  • 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும் , மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
  • ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும் , தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
  • தமிழ் நாட்டிலுள்ள பிரபல ஆலயங்களை நிர்வகிக்கும் ஆலய நிர்வாக அமைப்பின் பராமரிப்பில் இவ் ஆலயமும் இருந்துவருகின்றது. காலத்திற்குகாலம் புனருத்தாரணம் உட்படும் இவ்வாலயம் அண்மையில் (8-4-2009) குபாவிஷேகம் செயப்பட்டது .
  • இந்துக்கள் இக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. .
  • பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
  • வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில் போட்டி போடுமளவிற்கு சிறப்பு மிக்கது.

'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' கோயிலின் அதிகாரபூர்வ இணையத்தளம்.

மதுரை மீனாட்சி கோயில் தொடர்பான வீடியோ (You Tube)

கோயிலின் வடிவம் 360 பாகை வடிவில் பார்வையிட1

கோயிலின் வடிவம் 360 பாகை வடிவில் பார்வையிட2

மேலதிக google தேடு படம்

மீனாட்சி அம்மன் கோவில் தொடர்பில் பிற தளங்களில்

map

Madurai Temples

Last Updated on Thursday, 05 January 2012 09:28
 


...

Powered By relatedArticle

.....
"பனாமா கால்வாய்" 20 April 2012, 07.08 Janakan
உலகின் அதிசயங்களில் ஒன்றாக பலகாலம் தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட கட்டுமானமாக................
"டைடானிக்" கப்பல் 21 March 2013, 17.11 Janakan
  "டைடானிக்" - தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம். முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில்................
உலகின் மிகப்பெரிய நகரும் (ஊரும்) இயந்திரம்.
மனிதனின் தேவைகள் தினம்தினம் அதிகரிக்கும் வேகத்தில் தொழில் நுட்பமும் அதுசார்ந்த................
'மதுரை மீனாட்சி கோவில்'
மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டின் 2 வது பெரிய நகரமும் 2,500 ஆண்டுகள் பழைமை................
'தாஜ் மஹால்' 28 July 2011, 18.09 Janakan
'தாஜ் மஹால்'
அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில்................
ஆடம்பர உல்லாச தீவுகள்- Palm Islands
(காட்சி :ஆடம்பர உல்லாச செயற்கை தீவுகளின் ஒருபகுதி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள................
உலகில் பிரமாண்ட அளவிலும் செலவிலும் நடைபெறும் ஆய்வு.
உலகின் மிகப்பெரியதும் மிகவும் செலவுகூடியதுமான விஞ்ஞான பரிசோதனை LHC (Large Hadron Collider) எனும்................
தஞ்சை பெரிய (பிரகதீஸ்வரர்) கோவில்.
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய (பெருவுடையார்) கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆச்சரியமான................
உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான HKIA தொடர்பான படங்கள் மேலே உள்ளன. இந்த................
ஐபீல் கோபுரம் -Eiffel Tower
பிரஞ்சு நாட்டில் உள்ள ஐபீல் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ம் திகதி திறக்கப்பட்டது. இது................
'அகாசி கைக்ஜோ' உலகின் மிக நீளமான தொங்கு பாலம்.
படத்தில் காணப்படுவது யப்பான் (Japan) நாட்டில் அமைக்கப்பட்டுள்ள "அகாசி கைக்ஜோ" (Akashi Kaikyo)................
உலகின் மிக உயரமான கட்டிடம்-
பேர்ஜ் கோபுரம் (Burj Tower) [முக்கிய குறிப்பு: "பேர்ஜ் டுபாய்" தற்போது "பேர்ஜ் கலீஃபா" (Burj................
உலகப் புகழ்
1974 ம் வருடம் ஹங்கேரி (Hungary) நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ................
  மனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா................
வானியல் ஆராட்சியின் புரட்சிகர சாதனம் வானியல் தொலைநோக்கி "ஹபிள்" (Hubble). வளிமண்டல மாசு................
'பேர்ஜ்-அல்-அரப் ஹொட்டல்'
ஐக்கிய அரபுராச்சிய ( டுபை -Dubai ) மக்களின் விருந்தோம்பலின் சின்னம் பேர்ஜ்-அல்-அரப்................
உலகின் சாதனை நிகழ்வுகளை பதிவு செய்யும் அதிகாரபூர்வ ஏடாகிய கின்னஸ் புத்தகம் (Guinness World................
 


Share this post

Poll

அருவம் வடிவம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.
 

Special Poll

அருவம் விடையம் எப்படி உள்ளது ? கருத்துக்கணிப்பு.